ஆவடி: ஆவடி அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகர் 3வது செக்டரை சேர்ந்தவர் பிரபு. மனைவி மாலதி (24). இவர்களது மகன் தரூண், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான். நேற்று மகனை அழைத்து கொண்டு வருவதற்காக மாலதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். கன்னிகாபுரம் மேட்டு தெருவில் சென்றபோது பைக்கில் வந்த இருவர், மாலதியை வழிமறித்துள்ளனர். மாலதியிடம் பேச்சு கொடுத்து கொண்டே திடீரென அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை இருவரும் பறிக்க முயன்றனர். இதை சற்றும் எதிர்பாராத அவர், அவர்களுடன் போராடினார். இதில் கையில் கிடைத்த 2 பவுன் நகையுடன் பைக் ஆசாமிகள் தப்பினர். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/10/2025 4:03:53 PM
-Updated 6/10/2025 4:03:41 PM
-Updated 6/10/2025 4:03:26 PM
-Updated 6/10/2025 4:03:14 PM
-Updated 6/10/2025 4:00:32 PM
-Updated 6/10/2025 3:58:38 PM
-Updated 6/10/2025 3:58:26 PM
-Updated 6/10/2025 3:58:06 PM
-Updated 6/10/2025 3:57:54 PM
-Updated 6/10/2025 3:54:10 PM
-Updated 6/10/2025 3:53:59 PM
-Updated 6/10/2025 3:53:46 PM
-Updated 6/8/2025 12:43:12 PM
-Updated 6/6/2025 3:50:13 PM
-Updated 6/6/2025 3:45:54 PM