விபத்து நடந்த இடத்தில் காத்திருந்த போலீஸ்காரர் உள்பட 6 பேர் லாரி மோதி சாவு
பாட்னா: பீகார் மாநிலம் கயா அருகில் லாரி மோதிய விபத்தில் ஒரு போலீஸ்காரர் உள்பட 6 பேர் பலியாகினர். சாலை விபத்தில் பலியான 2 பேரின் சடலங்களை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்ப கயா மாவட்ட தேசிய நெடுஞ்சாலை 2ல் ஒரு போலீஸ்காரர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர் இன்று காலை வாகனத்துக்காக காத்திருந்தனர். அப்போது பின்பக்கத்தில் இருந்து வேகமாக வந்த லாரி ஒன்று போலீஸ்காரர் மற்றும் மூன்று பேர் மீது மோதியது. இதில் அருகில் சைக்கிளில் நின்றிருந்த மேலும் இரண்டு வாலிபர்கள் மீதும் லாரி மோதியது. இச்சம்பவத்தில் 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/10/2025 4:03:53 PM
-Updated 6/10/2025 4:03:41 PM
-Updated 6/10/2025 4:03:26 PM
-Updated 6/10/2025 4:03:14 PM
-Updated 6/10/2025 4:00:32 PM
-Updated 6/10/2025 3:58:38 PM
-Updated 6/10/2025 3:58:26 PM
-Updated 6/10/2025 3:58:06 PM
-Updated 6/10/2025 3:57:54 PM
-Updated 6/10/2025 3:54:10 PM
-Updated 6/10/2025 3:53:59 PM
-Updated 6/10/2025 3:53:46 PM
-Updated 6/8/2025 12:43:12 PM
-Updated 6/6/2025 3:50:13 PM
-Updated 6/6/2025 3:45:54 PM