காளஹஸ்தி: காளஹஸ்தி அருகே ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் 10 வயது சிறுமி பரிதாபமாக பலியானாள். காளஹஸ்தி அடுத்த வரதய்ய பாளையம் கடூர் கிராமத்தை சேர்ந்த முனிகிருஷ்ணய்யா என்பவரின் மகள் சந்தனா (10). பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு நேற்று சென்றாள். அங்கு வீட்டின் எதிரே இருந்த ஊஞ்சலில் ஆடினாள். அப்போது திடீரென கீழே விழுந்தாள். அப்போது ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதால் மயக்கம் அடைந்தாள். இதை பார்த்து அலறிய பாட்டி மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சூளூர்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தனா பரிதாபமாக இறந்தாள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/8/2025 12:43:12 PM
-Updated 6/6/2025 3:50:13 PM
-Updated 6/6/2025 3:45:54 PM
-Updated 6/6/2025 3:11:33 PM
-Updated 6/6/2025 3:11:21 PM
-Updated 6/6/2025 3:11:11 PM
-Updated 6/6/2025 2:33:09 PM
-Updated 6/5/2025 3:17:43 PM
-Updated 6/5/2025 3:17:18 PM
-Updated 6/5/2025 3:17:05 PM
-Updated 6/5/2025 3:16:24 PM
-Updated 6/5/2025 3:16:09 PM
-Updated 6/5/2025 3:15:52 PM
-Updated 6/4/2025 3:34:07 PM
-Updated 6/4/2025 3:33:06 PM