Tamil Month Rasi Palan Maasi 2013
2013
11
May
செங்கல்பட்டு அருகே நீஞ்சல்மடு அணை, களத்தூரான் கால்வாய் சீரமைப்பு பணியில் தொய்வு விவசாயிகள் கவலை


செங்கல்பட்டு: செங்கல்பட்டு பைபாசை ஒட்டி திம்மாவரம் அருகில் நீஞ்சல் மடுவின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டது. இதன் மூலம் வாலாஜபாத் அருகே தென்னேரியில் இருந்து தொடங்கி திம்மாவரம் வரை உள்ள ஏரிகளின் உபரி நீர் தடுக்கப்பட்டு களத்தூரான் கால்வாய் மூலம் பொன்விளைந்த களத்தூர் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்த ஏரி நிரம்பியதும் அதிலிருந்து கிளை ஏரிகளான ஆனூர், ஆலவாய், சாலூர், சோகண்டி, ஓரப்பட்டு, பொன்பதர்கூடம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர் சென்று நிரம்பும். இதன் மூலம் பொன்விளைந்தகளத்தூர் ஏரியை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். பல வருடங்களுக்கு முன் நீஞ்சல் மடு அணை மற்றும் களத்தூரான் கால்வாய் சேதமடைந்தது.

எனவே நீஞ்சல் மடு அணையை சீரமைத்து மீண்டும் களத்தூரான் கால்வாய் மூலம் பொன்விளைந்த களத்தூர் ஏரிக்கு நீரை திருப்ப வேண்டும் என்று அப்பகுதி ஏரி விவசாயிகள் சங்கம் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அதன் பேரில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.9 கோடியில் புதிதாக அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் ரூ.8 கோடி அணை கட்டுவதற்கும், ரூ.50 லட்சம் களத்தூரான் கால்வாயை சீரமைக்கவும், ரூ.50 லட்சம் பொன்விளைந்த களத்தூர் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தவும் ஒதுக்கீடு செய்து அதற்கான பணி கடந்த 2 வருடங்களாக நடந்து வருகிறது. 16 மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய பணி 2 வருடங்கள் கடந்தும் முடிந்தபாடில்லை. கடந்த பருவ மழையிலும் தண்ணீர் வீணானது. இந்த வருட பருவ மழைக்கு முன்பு அணையை கட்டி முடித்து ஏரிக்கு நீர் வர அதிகாரிகள் உதவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran