திருவள்ளூர் பகுதிகளில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. தலைவராக ஜெயபால், துணைத் தலைவராக நம்பாக்கம் முருகேசன் ஆகியோர் பதவி ஏற்றனர். இயக்குனர்களாக வக்கீல்கள் கோ.சீத்தாராமன், ராஜராஜன், குமரவேல், ரகுபதி, ஜெயவேல், முரளி, அனிதா, மகேஸ்வரி, மலர்க்கொடி ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஈக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக ரங்கநாதன், துணைத் தலைவராக மலையப்பன், இயக்குனர்களாக தாமரை வதனி, பவானி, தமயேந்தி, ஜான்சன், மனோகர், வேதநாயகம், பாலாஜி, பாபு, புஷ்பராஜ் ஆகியோர் பதவி ஏற்றனர்.திருவள்ளூர் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் தலைவராக பெருவை சீனிவாசன், துணைத் தலைவராக சொக்கலிங்கம், இயக்குனர்களாக ராஜசேகரன், சுப்பிரமணி, வெற்றிவேல், லோகநாதன், ராமச்சந்திரன், அருள்தாஸ், புஷ்பராணி, ஜெய்சித்ரா, மாரியம்மாள் பதவி ஏற்றனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரும் அமைச்சர் பி.வி.ரமணா, மணிமாறன் எம்எல்ஏ, ஒன்றியக் குழு தலைவர் புட்லூர் சந்திரசேகர், மாநில இளைஞரணி இணை செயலாளர் செவ்வை சம்பத்குமார், தொகுதி செயலாளர் தண்ணீர்குளம் ஏழுமலை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-Updated 6/5/2025 3:17:43 PM
-Updated 6/5/2025 3:17:18 PM
-Updated 6/5/2025 3:17:05 PM
-Updated 6/5/2025 3:16:24 PM
-Updated 6/5/2025 3:16:09 PM
-Updated 6/5/2025 3:15:52 PM
-Updated 6/4/2025 3:34:07 PM
-Updated 6/4/2025 3:33:06 PM
-Updated 6/4/2025 3:30:42 PM
-Updated 6/3/2025 3:15:29 PM
-Updated 6/3/2025 12:57:51 PM
-Updated 5/31/2013 3:19:08 PM
-Updated 5/29/2013 4:20:07 PM
-Updated 5/29/2013 4:15:56 PM
-Updated 5/29/2013 4:07:45 PM