ஆவடி: திருநின்றவூரில் சர்ச்சுக்கு சென்றுவிட்டு திரும்பிய பெண்ணிடம் ஐந்து பவுன் வழிப்பறி செய்யப்பட்டது. ஆவடி அருகே திருநின்றவூர் ராமதாசபுரம் காந்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் டோமினிக் சைமன். இவர் பாடியில் உள்ள டிவி ஷோ ரூமில் பணியாற்றுகிறார். இவரது மனைவி ரூபி (35). நேற்று மதியம் முருகேசன் நகர் பகுதியில் உள்ள சர்ச்சுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்துவந்தார்.
திருநின்றவூர்& பெரியபாளையம் சாலையில் உள்ள ரவுண்டானா அருகே ரூபியை பைக்கில் வந்த 2 பேர் மறித்து, அவர் அணிந்து இருந்த ஐந்து பவுன் செயினை பறித்தனர். ரூபி சத்தம் போட்டதால் மக்கள் குவிந்தனர். ஆனால் திருடர்கள் பைக்கில் தப்பிசென்று விட்டனர்.இது குறித்து புகாரின்பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறித்து தப்பிய நபர்களை தேடி வருகின்றனர். மக்கள் மற்றும் வியாபாரிகள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் வழிப்பறி நடந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/30/2013 2:08:49 PM
-Updated 4/30/2013 2:08:38 PM
-Updated 4/30/2013 2:07:47 PM
-Updated 4/30/2013 2:03:53 PM
-Updated 4/30/2013 2:03:36 PM
-Updated 4/30/2013 2:03:13 PM
-Updated 4/30/2013 2:03:03 PM
-Updated 4/30/2013 2:00:24 PM
-Updated 4/30/2013 2:00:13 PM
-Updated 4/30/2013 2:00:01 PM
-Updated 4/30/2013 1:59:48 PM
-Updated 4/30/2013 1:59:37 PM
-Updated 4/30/2013 1:59:25 PM
-Updated 4/30/2013 1:55:28 PM
-Updated 4/29/2013 3:47:56 PM