வையாவூர் ஊராட்சியில் கால்வாய் தண்ணீர் வெளியேற சிறுபாலம் அமைக்க கோரிக்கை
வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சியில் உள்ள பாரதி நகர் பகுதியில் 300 வீடுகள் உள்ளன. இங்கு மழை காலத்தில் தெருக்களில் மழைநீர் தேங்குகிறது. தண்ணீர் வெளியேற கால்வாய் கட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் 2 ஆண்டுக்கு முன்பு கால்வாய் கட்டப்பட்டது. தற்போது கால்வாய் பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே மண் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சில பகுதியில் கால்வாய் முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததாலும், தண்ணீர் வெளியேற வாட்டம் இல்லாததாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைக்க வேண்டும். அப்போதுதான் தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேறும்.
மேலும் இந்த தண்ணீரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. அவை இரவில் வீடுகளில் புகுந்து கடிக்கின்றன. இதனால் மக்கள் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். இதுதவிர விஷபூச்சிகள், பாம்பு நடமாட்டம் உள்ளது. மேலும் தெருக்களில் கிடக்கும் கவர்கள், பிளாஸ்டிக், கழிவு பொருட்கள் போன்றவை கால்வாயில் விழுகின்றன. இதனால் துர்நாற்றம் அடிக்கிறது. எனவே வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்த பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து, தண்ணீர் வெளியேற சிறுபாலம் அமைக்க வேண்டும் என்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/30/2013 2:08:49 PM
-Updated 4/30/2013 2:08:38 PM
-Updated 4/30/2013 2:07:47 PM
-Updated 4/30/2013 2:07:37 PM
-Updated 4/30/2013 2:03:53 PM
-Updated 4/30/2013 2:03:13 PM
-Updated 4/30/2013 2:03:03 PM
-Updated 4/30/2013 2:00:24 PM
-Updated 4/30/2013 2:00:13 PM
-Updated 4/30/2013 2:00:01 PM
-Updated 4/30/2013 1:59:48 PM
-Updated 4/30/2013 1:59:37 PM
-Updated 4/30/2013 1:59:25 PM
-Updated 4/30/2013 1:55:28 PM
-Updated 4/29/2013 3:47:56 PM