நில அபகரிப்பு தடுப்பு போலீசில் புகார் கொடுத்த விவசாயிக்கு அடி
ஊத்துக்கோட்டை: நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்த விவசாயியை சரமாரியாக தாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை தேடி வருகின்றனர்.வெங்கல் அருகே மேல் செம்பேடு கிராமத்தில் வசிப்பவர் ஜெயராமன் (31). விவசாயியான இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (32) என்பவருக்கும் நில பிரச்னை உள்ளது. இது சம்பந்தமாக, திருவள்ளூரில் உள்ள நில அபகரிப்பு பிரிவில் நேற்று ஜெயராமன் புகார் கொடுத்துவிட்டு வந்தார். அப்போது, அவரை செம்பேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசனின் உறவினர்கள் எஸ்.வெங்கடேசன் (28), ரமேஷ் (24) ஆகியோர் வழிமறித்து சரமாரியாக தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த ஜெயராமன் சிகிச்சை பெறுகின்றார். இதுகுறித்த புகாரின்பேரில் வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/30/2013 2:08:49 PM
-Updated 4/30/2013 2:08:38 PM
-Updated 4/30/2013 2:07:47 PM
-Updated 4/30/2013 2:07:37 PM
-Updated 4/30/2013 2:03:53 PM
-Updated 4/30/2013 2:03:36 PM
-Updated 4/30/2013 2:03:03 PM
-Updated 4/30/2013 2:00:24 PM
-Updated 4/30/2013 2:00:13 PM
-Updated 4/30/2013 2:00:01 PM
-Updated 4/30/2013 1:59:48 PM
-Updated 4/30/2013 1:59:37 PM
-Updated 4/30/2013 1:59:25 PM
-Updated 4/30/2013 1:55:28 PM
-Updated 4/29/2013 3:47:56 PM