2 நாள் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
காரைக்கால் : இரண்டு நாள் ஸ்டிரைக் முடிவுக்கு வந்ததையடுத்து காரைக்கால் மீனவர்கள் இன்று மீண்டும் கடலுக்கு சென்றனர். காரைக்கால் பகுதியில் இருந்து கடந்த 5ம் தேதி கடலுக்கு சென்ற 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். அவர்களை இலங்கையில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சுமார் 6000 பேர் நேற்றுமுன்தினம் ஸ்டிரைக் தொடங்கினர். நேற்று 2ம் நாளாக மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காரைக்கால்மேடு மற்றும் திரு.பட்டினம் மீனவர்கள் எம்எல்ஏ திருமுருகன் தலைமையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். அப்போது காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த முதல்வர், பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தொலைபேசி மூலம் பேசியுள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர் என்றார். இதை ஏற்றும், இன்னும் ஒரு வாரத்தில் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருவதை கருத்தில் கொண்டும் காரைக்கால் பகுதி மீனவர்கள் ஸ்டிரைக்கை கைவிட்டு இன்று மீண்டும் கடலுக்கு சென்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 4/13/2013 12:18:21 PM
-Updated 4/13/2013 12:17:59 PM
-Updated 4/13/2013 12:17:42 PM
-Updated 4/13/2013 12:17:30 PM
-Updated 4/13/2013 12:17:20 PM
-Updated 4/12/2025 3:00:19 PM
-Updated 4/12/2025 2:59:56 PM
-Updated 4/12/2025 2:59:29 PM
-Updated 4/12/2025 2:59:00 PM
-Updated 4/12/2025 2:58:45 PM
-Updated 4/9/2025 5:26:21 PM
-Updated 4/9/2025 5:13:35 PM
-Updated 4/9/2025 5:13:23 PM
-Updated 4/9/2025 5:13:13 PM
-Updated 4/9/2025 5:12:55 PM