Tamil Month Rasi Palan Maasi 2013
2013
09
Apr
நாகர்கோவிலில் விபத்து : குடோனில் பயங்கர தீ: மருந்துகள் சாம்பல்


நாகர்கோவில் : நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகே பிரபல வணிக வளாகம் உள்ளது. இங்கு மேல் தளத்தில் மருந்து குடோனும், கீழ் தளத்தில் அதன் அலுவலகம் மற்றும் வங்கி  பிற விற்பனை நிறுவனங்கள் உள்ளன. மருந்து குடோனை திருநெல்வேலியை சேர்ந்த ராதா சங்கர் என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இரவு 10.15 மணியளவில் குடோனில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அந்த வழியாக சென்றவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேல் மாடி கதவை உடைத்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். அனைத்தும் மருந்து பொருட்கள் என்பதால் தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள் எரிந்து சாம்பல் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட குடோன் அருகில்தான் தலைமை தபால் நிலையம், பிரபல வங்கி, மருத்துவமனைகள் உள்ளன. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel