Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Feb
சகோதரர்களுக்கு இரும்பு கம்பி அடி : 2 வாலிபர்கள் கைது


திருவள்ளூர்: முன்விரோதத்தில் பைக்கை வழிமறித்து சகோதரர்களை இரும்பு கம்பியால் தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே நேற்று நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன்கள் அஜித் (23), சின்னஅரசு (21), ரஜினி (19) ஆகியோர் ஒரே பைக்கில் கீழ்மணம்பேடு கிராமத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த நேமம் கிராமத்தை சேர்ந்த அருள் (24), தாமஸ் (23) ஆகியோர் முன்விரோதம் காரணமாக சகோதரர்களை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த ரஜினி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
புகாரின்பேரில் வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அருள், தாமஸ் ஆகியோரை கைது செய்து விசாரிக்கிறார்கள்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel