Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Feb
வளர்புரம் ஊராட்சியில் மின்மோட்டார் வயர் துண்டிப்பு : குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வளர்புரம் ஊராட்சியில் வளர்புரம், சின்ன வளர்புரம், தெலுங்கு நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடிநீர் தேவைக்காக மண்ணூர் கூட்டுச்சாலையில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 4 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, வளர்புரம் ஊராட்சியில் உள்ள 6 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது மண்ணூர் கூட்டு சாலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல பயன்படும் மின்மோட்டாரின் வயரினை விஷமிகள் சிலர் துண்டித்தும், குடிநீர் மோட்டார்கள் பழுதடையவும் செய்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஏசுபிள்ளை, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘வளர்புரம் ஊராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மண்ணூர் பகுதியில் 4 மின் மோட்டார் அமைத்து பைப் லைன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மண்ணூர் பகுதியை சேர்ந்த சிலர் மின்சார வயரினை துண்டித்துள்ளனர். இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மின் வயரினை துண்டித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel