Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Feb
சர்வோதய இயக்க தலைவர் சங்கரலிங்கம் ஜெகநாதன் மரணம் இன்று மாலை இறுதி சடங்கு : வைகோ இரங்கல்


சென்னை: முதுபெரும் காந்தியவாதியும் சர்வோதய இயக்க தலைவருமான சங்கரலிங்கம் ஜெகநாதன் (99), திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் நேற்று காலமானார். காந்தி, வினோபா பாவே ஆகியோருடன் நெருங்கி பழகிய இவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள செங்கற்படை கிராமத்தில் 1914ம் ஆண்டு பிறந்தார். வினோபா பாவே நடத்திய பூமிதான இயக்கத்தில் சேர்ந்து, தமிழகத்தில் 13 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் பீகார் மாநிலத்தில் 23 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் தானமாக பெற்று ஏழைகளுக்கு வழங்கியவர். காந்திய வழியில் சேவை ஆற்றிய இவருக்கு நோபல் பரிசுக்கு இணையான லைவ்லி குட் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன.

மறைந்த ஜெகநாதனுக்கு மனைவி கிருஷ்ணம்மாள், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை காந்தி கிராமத்தில் நடக்கிறது. ஜெகநாதன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘வினோபாஜியின் சீடராக திகழ்ந்த ஜெகநாதன், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பூமிதான இயக்கத்தில் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சென்று நல்ல உள்ளம் கொண்ட செல்வந்தர்களிடம் நிலங்களை பெற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். மார்டின் லூதர் கிங் தமிழகத்துக்கு வந்தபோது, ஜெகநாதன் வீட்டுக்கு சென்று பெருமைப்படுத்தினார்’ என குறிப்பிட்டுள்ளார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel