Tamil Month Rasi Palan Maasi 2013
2013
07
Feb
சென்னையில் ராஜ்நாத் சிங் : பா.ஜ.வினர் உற்சாக வரவேற்பு


சென்னை-: சென்னையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த பா.ஜ. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பா.ஜ. கட்சியின் அகில இந்திய தலைவராக ராஜ்நாத் சிங், சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவர், இன்று பகல் சென்னை வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பகல் 12.12 மணிக்கு சென்னை வந்த ராஜ்நாத் சிங்கை, விமான நிலையத்தில் தமிழக பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், லலிதா குமாரமங்கலம், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் வரவேற்றனர். விமான நிலைய வரவேற்பை முடித்துக் கொண்டு, காரில் அண்ணாநகர் வந்தார். அங்குள்ள பாலாஜி ஸ்ரீமஹாலில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்று மாலை தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு செல்லும் ராஜ்நாத் சிங், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel