Tamil Month Rasi Palan Maasi 2013
2013
07
Feb
வியாசர்பாடியில் பரபரப்பு : பலாத்கார வழக்கில் தண்டனைக்கு பயந்து ஆட்டோ டிரைவர் பரிதாப தற்கொலை


பெரம்பூர்-: பலாத்கார வழக்கில் தண்டனைக்கு பயந்து ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வியாசர்பாடியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி எம்கேபி நகர் 18வது கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் மதிவாணன் (36). ஆட்டோ டிரைவர். மனைவி ஹேமலதா (32). தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு மதிவாணன், நண்பருடன் சேர்ந்து போதையில் வியாசர்பாடி 3வது பள்ளத்தெருவை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து மதிவாணன், நண்பர் கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்த வழக்கு, சென்னை பாரிமுனை நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது. வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. நீதிபதி முன்பு இன்று வழக்கு இறுதிகட்ட விசாரணை நடைபெற உள்ளது. இதில் மதிவாணன், கார்த்திக் ஆகியோருக்கு தண்டனை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையறிந்த மதிவாணன் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்றிரவு மனைவி, குழந்தைகளுடன் சாப்பிட்டு அவர் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் வீட்டில் உள்ள தனி அறைக்கு தூங்க சென்றார். இன்று காலை மதிவாணன் அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. சந்தேகத்தின் பேரில் ஹேமலதா அங்கு சென்று பார்த்தபோது, மதிவாணன் தூக்கில் இறந்து கிடந்தார். இது குறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Youtube Dinakaran Live Channel