இலவச வேட்டி, சேலை உள்பட அரசு திட்டங்கள் கிடைக்கவில்லை செரப்பணஞ்சேரி மக்கள் புகார்
ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் செரப்பணஞ்சேரி கிராமத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செரப்பணஞ்சேரி மக்கள் கூறியதாவது: செரப்பணஞ்சேரியில் சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஆண்டுதோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுக்கு கடந்த 2012, 13 ஆம் ஆண்டு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டால் எனக்கும் தெரியாது, வருவாய் ஆய்வாளரிடம் கேளுங்கள் என்று கூறுகிறார். வருவாய் ஆய்வாளரிடம் கேட்டால் செரப்பணஞ்சேரி கிராமத்திற்கு குறைவாக வேட்டி, சேலைகள் வந்துள்ளது, அதனால் பொது மக்களுக்கு வழங்க முடியவில்லை என்று கூறுகிறார். அரசு வழங்கும் இலவச திட்டங்கள் செரப்பணஞ்சேரி கிராமத்திற்கு முறையாக கிடைப்பதில்லை. புறக்கணிக்கப்பட்ட கிராமாக உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/11/2025 5:20:54 PM
-Updated 2/11/2025 5:20:45 PM
-Updated 2/11/2025 5:20:36 PM
-Updated 2/11/2025 5:20:26 PM
-Updated 2/11/2025 4:55:46 PM
-Updated 2/11/2025 4:55:38 PM
-Updated 2/11/2025 4:55:29 PM
-Updated 2/11/2025 4:55:19 PM
-Updated 2/11/2025 4:54:40 PM
-Updated 2/11/2025 4:54:31 PM
-Updated 2/11/2025 4:54:23 PM
-Updated 2/9/2025 1:29:07 PM
-Updated 2/9/2025 1:28:58 PM
-Updated 2/9/2025 12:42:18 PM
-Updated 2/9/2025 12:42:10 PM