திருவள்ளூர் அருகே கிராமத்தில் சேலை டிசைன் பட்டறையில் கொத்தடிமை குடும்பங்கள் மீட்பு
திருவள்ளூர்-: திருவள்ளூர் அருகே சேலைக்கு டிசைன் போடும் சிறுதொழில் கூடத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்துவந்த குடும்பங்களை அதிகாரிகள் மீட்டனர். சென்னை சேத்துப்பட் டில் உள்ள ஐஜெஎம் தொண்டு நிறுவனத்துக்கு, திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள திருமேனி குப்பம் வாசனாம்பட்டு கிராமத்தில் உள்ள சிறு தொழில் கூடத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து, திருவள்ளூர் சப் கலெக்டர் ரவிக்குமாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, ரவிக்குமார் மற்றும்அதிகாரிகள் நேற்று வாசனாம்பட்டு கிராமத்துக்கு விரைந்தனர்.
அங்கு, சேலைகளுக்கு டிசைன் போடும் பட்டறை நடத்திவரும் சந்திரன், சதீஷ் ஆகியோரிடம் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே குன்னப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (28), இவரது மனைவி குமாரி. கோபி (30), இவரது மனைவி மல்லிகா மற்றும் இரு குடும்பத்தின் குழந்தைகளை அதிகாரிகள் மீட்டனர். இவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து கடந்த 4 வருடங்களாக கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆறுமுகம், கோபி குடும்பத்துக்கு அரசு சார்பில் முன்பணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் விடுதலை சான்றிதழ் கொடுக்கப்பட்டு ஊருக்கு அனுப்பிவைத்தனர். இருவரின் குடும்பத்துக்கு அரசு நிதியாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/11/2025 5:20:54 PM
-Updated 2/11/2025 5:20:45 PM
-Updated 2/11/2025 5:20:36 PM
-Updated 2/11/2025 5:20:26 PM
-Updated 2/11/2025 4:55:46 PM
-Updated 2/11/2025 4:55:38 PM
-Updated 2/11/2025 4:55:29 PM
-Updated 2/11/2025 4:55:19 PM
-Updated 2/11/2025 4:54:40 PM
-Updated 2/11/2025 4:54:31 PM
-Updated 2/11/2025 4:54:23 PM
-Updated 2/9/2025 1:29:07 PM
-Updated 2/9/2025 1:28:58 PM
-Updated 2/9/2025 12:42:18 PM
-Updated 2/9/2025 12:42:10 PM