தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (67). தனியார் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருச்சியில் நடந்த உறவினரின் திருமணத்துக்கு கடந்த 29ம் தேதி மனைவியுடன் சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பினார். அப்போது இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. மேலும் வீட்டில் நிறுத்தியிருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான காரும் மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை, பெருங்களத்தூர் பகுதியில் ஒரு கார் அனாதையாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அது மாயமான சிவசுப்பிரமணியத்தின் கார் என்பது தெரிந்தது. அதை போலீசார் மீட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/7/2025 4:57:16 PM
-Updated 2/7/2025 4:57:03 PM
-Updated 2/7/2025 4:56:50 PM
-Updated 2/7/2025 4:02:18 PM
-Updated 2/7/2025 4:02:05 PM
-Updated 2/7/2025 4:01:55 PM
-Updated 2/7/2025 4:01:45 PM
-Updated 2/7/2025 4:01:27 PM
-Updated 2/7/2025 3:18:43 PM
-Updated 2/7/2025 3:18:35 PM
-Updated 2/7/2025 3:18:24 PM
-Updated 2/7/2025 2:39:53 PM
-Updated 2/7/2025 2:39:44 PM
-Updated 2/7/2025 2:39:34 PM
-Updated 2/7/2025 2:39:21 PM