திருக்கழுக்குன்றத்தில் விடுதலை சிறுத்தை 7ம் தேதி ஆர்ப்பாட்டம்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சிறுத்தை கிட்டு தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் இளைய வளவன், மாவட்ட வணிகர் அணி செயலாளர் தமிழ்வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் சிறப்புரையாற்றினார். இதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பலப்படுத்த வேண்டும், இதர சமூகத்தை சேர்ந்தவர்கள் தலித் மக்களை தாக்குவதை தடுக்க வேண்டும், மாவட்ட பொருளாளர் இளைய வளவன் சமீபத்தில் தாக்கப்பட்டதை கண்டித்து வரும் 7ம் தேதி திருக்கழுக்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் கட்சியினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் நந்தன், சிவம், வேதகிரி உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/6/2025 5:36:25 PM
-Updated 2/6/2025 5:24:45 PM
-Updated 2/6/2025 5:24:36 PM
-Updated 2/6/2025 5:24:16 PM
-Updated 2/6/2025 5:24:06 PM
-Updated 2/6/2025 5:23:56 PM
-Updated 2/6/2025 5:23:33 PM
-Updated 2/6/2025 2:56:02 PM
-Updated 2/6/2025 2:55:47 PM
-Updated 2/6/2025 2:47:10 PM
-Updated 2/5/2025 5:22:47 PM
-Updated 2/5/2025 5:22:38 PM
-Updated 2/5/2025 5:22:29 PM
-Updated 2/5/2025 4:50:12 PM
-Updated 2/5/2025 4:50:02 PM