போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி சண்டை : கூடுவாஞ்சேரியில் பரபரப்பு
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் வள்ளி நகரை சேர்ந்தவர் செந்தில்நாதன். வருமான வரித் துறை அலுவலர். இவரது மகள் அன்னபூரணி (19). சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். செங்கல்பட்டு அடுத்த சாலவாக்கம் கூட்டு சாலை சந்தி தெருவை சேர்ந்தவர் பாண்டியன். பில்டிங் கான்ட்ராக்டர். இவரது மகன் புருஷோத்தமன் (23). பள்ளியில் படிக்கும்போது அன்னபூரணி, புருஷோத்தமன் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலிக்க தொடங்கினர். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பியது.
அன்னப்பூரணிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதையடுத்து 2 மாதங்களுக்கு முன்பு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது. கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி புவனேஸ்வரி அம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மகளை காணவில்லை என அன்னபூரணியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் புருஷோத்தமன், அன்னபூரணி ஆகியோர் நேற்று மாலை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
போலீசார் தகவலின் பேரில் அன்னப்பூரணியின் பெற்றோரும் வந்தனர். அப்போது அன்னபூரணி, ‘நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். சென்னையில் ஹாஸ்டலில் தங்கிக் கொள்கிறேன்‘ என்றார். இதற்கு புருஷோத்தமன் சம்மதிக்கவில்லை. ‘என் வீட்டில் இருந்து குடும்பம் நடத்திக் கொண்டு தினமும் காலேஜூக்கு போகலாம் வா‘ என அன்னபூரணியிடம் கூறினார். இதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையிட்டு கொண்டனர். போலீசார் காதல் ஜோடியை சமரசம் செய்தனர். பிறகு அன்னபூரணியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/4/2025 5:00:56 PM
-Updated 2/4/2025 4:43:51 PM
-Updated 2/4/2025 4:43:39 PM
-Updated 2/4/2025 4:43:28 PM
-Updated 2/4/2025 4:43:18 PM
-Updated 2/4/2025 4:43:08 PM
-Updated 2/4/2025 3:29:49 PM
-Updated 2/4/2025 3:29:40 PM
-Updated 2/4/2025 3:12:49 PM
-Updated 2/4/2025 3:12:40 PM
-Updated 2/4/2025 2:44:00 PM
-Updated 2/2/2025 1:37:12 PM
-Updated 2/2/2025 1:37:04 PM
-Updated 2/2/2025 1:36:55 PM
-Updated 2/2/2025 1:36:46 PM