கோபி: ஈரோடு மாவட்டம், நம்பியூர் கெடாரை கிராமம் ஆவாராங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சென்னியப்பன்(84). விவசாயி. 2வது மகன் கனகரத்தினம்(49), மருமகள் கஸ்தூரி என்ற விஜயேஸ்வரி, பேத்தி கவியாழினி(4) ஆகியோருடன் சென்னியப்பன் வசித்து வருகிறார். நேற்று வீட்டில் விஜயேஸ்வரி, கவியாழினி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சென்னியப்பன், திடீரென மருமகள், பேத்தி ஆகியோர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றார். திடுக்கிட்டு விழித்த விஜயேஸ்வரி, அலறியடித்தபடி மகளை தூக்கி கொண்டு வெளியே ஓடி உயிர் தப்பினார். வீட்டில் சிதறிய மண்ணெண்ணெய் மீது சென்னியப்பன் தீ வைத்தார். இதில் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, சென்னியப்பனிடம் விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/22/2013 4:58:26 PM
-Updated 1/22/2013 4:58:14 PM
-Updated 1/22/2013 4:58:02 PM
-Updated 1/22/2013 4:57:50 PM
-Updated 1/22/2013 4:57:40 PM
-Updated 1/22/2013 4:57:31 PM
-Updated 1/22/2013 4:57:22 PM
-Updated 1/22/2013 4:57:13 PM
-Updated 1/22/2013 4:57:03 PM
-Updated 1/22/2013 4:48:43 PM
-Updated 1/22/2013 4:48:27 PM
-Updated 1/22/2013 4:06:30 PM
-Updated 1/22/2013 4:06:18 PM
-Updated 1/22/2013 2:35:29 PM
-Updated 1/22/2013 2:07:23 PM