Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2013
19
Jan
பொங்கல் விழா ஏற்பாடு செய்யாத விவசாயிக்கு இரும்பு பைப் அடி அப்பா, மகன் கைது


ஊத்துக்கோட்டை: பொங்கல் விழா ஏற்பாடு செய்யாத விவசாயியை இரும்பு கம்பியால் அடித்து காயப்படுத்திய அப்பா, மகனை போலீசார் கைது செய்தனர்.
பெரியபாளையம் அருகே பனையஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் தணிகாசலம் (30). விவசாயி. சேகர் (45). கூலி தொழிலாளி.  ஒவ்வொரு வருடமும் கிராமத்தில் நடக்கும் பொங்கல் விழாவுக்கு தணிகாசலம்தான் ஏற்பாடு செய்வார். இந்தாண்டு ஏற்பாடுகளை அவர் கவனிக்கவில்லையாம். இதுபற்றி கடந்த 15ம் தேதி தணிகாசலத்தை சந்தித்து சேகர் கேட்டுள்ளார்.

அப்போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அடிதடியில் ஈடுபட்டனர். சேகருக்கு ஆதரவாக வந்த மகன் கார்த்திக், உறவினர்கள் முனிவேல், ரவி ஆகியோர் தணிகாசலத்தை இரும்பு கம்பியால் அடித்தனர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தடுக்க போராடிய தணிகாசலம் உறவினர் கவுரிக்கும் அடி விழுந்தது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெறுகின்றனர். இதுசம்பந்தமாக பெரியபாளையம் காவல் நிலையத்தில் நேற்று தணிகாசலம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சேகர், கார்த்திக்கை கைது செய்தனர். ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana