காஞ்சிபுரம்: ஒரு ஏக்கர் நிலத்தை 3 பேருக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட அப்பா, மகன்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்தவர் சோம்குமார் (55). இவர், 2006ம் ஆண்டு காஞ்சிபுரம் அடுத்த சிங்கடிவாக்கம் அருகே உள்ள சூரமேனிகுப்பம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் (70) என்பவரிடம் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கினார். ஆனால் அந்த இடத்தை 2007ம் ஆண்டு சீனிவாசன் என்பவருக்கு ஜெயராமன் மீண்டும் விற்பனை செய்துவிட்டார்.
இதற்கிடையே, சோம்குமார் வாங்கிய ஒரு ஏக்கர் இடத்தை ஜெயராமன் மகன்கள் பழனி, வெங்கடேசன், ரவி, தாஸ் ஆகியோர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சந்திரசேகர் ரெட்டி என்பவருக்கு விற்பனை செய்துவிட்டனர். இதுபற்றி தெரிய வந்தததும் சோம்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, காஞ்சிபுரம் போலீஸ் எஸ்பி சேவியர் தன்ராஜிடம் புகார் கொடுத்தார். இந்த புகார், நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், எஸ்ஐ உதயகுமார் விசாரித்ததில் நில மோசடி நடந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து, ஜெயராமன், மகன்கள் ரவி, தாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பழனி, வெங்கடேசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/22/2013 4:58:26 PM
-Updated 1/22/2013 4:58:14 PM
-Updated 1/22/2013 4:58:02 PM
-Updated 1/22/2013 4:57:50 PM
-Updated 1/22/2013 4:57:40 PM
-Updated 1/22/2013 4:57:31 PM
-Updated 1/22/2013 4:57:22 PM
-Updated 1/22/2013 4:57:13 PM
-Updated 1/22/2013 4:57:03 PM
-Updated 1/22/2013 4:48:43 PM
-Updated 1/22/2013 4:48:27 PM
-Updated 1/22/2013 4:06:30 PM
-Updated 1/22/2013 4:06:18 PM
-Updated 1/22/2013 2:35:29 PM
-Updated 1/22/2013 2:07:23 PM