Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2013
19
Jan
ஆவடி அம்பத்தூர் பகுதியில் 3 இளம்பெண்கள் திடீர் மாயம் கடத்தலா? போலீஸ் விசாரணை


ஆவடி: ஆவடி, அம்பத்தூர் பகுதியில் 3 இளம்பெண்கள் திடீரென மாயமாகிவிட்டனர். ஆவடி புதிய ராணுவ சாலையை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் ரேவதி (20). பிபிஏ படித்துவிட்டு வேலை தேடி வந்தார். நேற்று முன்தினம் கொசுவர்த்தி வாங்க கடைக்கு சென்ற ரேவதி, பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை. அம்பத்தூர் அத்திப்பட்டு ரெட்டி தெருவை சேர்ந்தவர் பிரபு மனைவி பூங்கொடி (24). இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 16ம் தேதி பூங்கொடி, குழந்தையுடன் விழுப்புரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர், அவர் விழுப்புரம் செல்லவில்லை. பல இடத்தில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பூங்கொடியின் செல்போன் ஆப் செய்யப்பட்டு உள்ளது. திருநின்றவூர் நத்தம்பேடு திலகர் சாலையை சேர்ந்தவர் அகமது உசேன். இவரது மகள் சாபீரா (19). திருநின்றவூர் சிடிஎச் சாலையில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை பற்றி விசாரித்தும் எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து புகார்கள் அடிப்படையில், ஆவடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana