பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த வாயலூர் ஊராட்சியில் உள்ள ஊரனம்பேடு கிராமத்தில் இருந்து தத்தமஞ்சு செல்லும் 4 கிலோ மீட்டர் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் நேற்று திருவெள்ளைவாயல் பஜாரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். வாயலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தேன்மொழி குமார் தலைமை வகித்தார். ஆண்கள், பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கோஷம் போட்டு அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர். பொன்னேரி துணை தாசில்தார் தமிழ்ச்செல்வன், மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் ஏழுமலை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேல், ராஜேந்திரன் ஆகியோர் சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர். ஒன்றரை மாதத்தில் பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படும் என்று ஒன்றிய ஆணையாளர் ஏழுமலை உறுதி அளித்தார். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/22/2013 4:58:26 PM
-Updated 1/22/2013 4:58:14 PM
-Updated 1/22/2013 4:58:02 PM
-Updated 1/22/2013 4:57:50 PM
-Updated 1/22/2013 4:57:40 PM
-Updated 1/22/2013 4:57:31 PM
-Updated 1/22/2013 4:57:22 PM
-Updated 1/22/2013 4:57:13 PM
-Updated 1/22/2013 4:57:03 PM
-Updated 1/22/2013 4:48:43 PM
-Updated 1/22/2013 4:48:27 PM
-Updated 1/22/2013 4:06:30 PM
-Updated 1/22/2013 4:06:18 PM
-Updated 1/22/2013 2:35:29 PM
-Updated 1/22/2013 2:07:23 PM