கொங்கணாபுரம் சந்தையில் பொங்கல் சேல்ஸ் அமோகம் 10 கோடி ரூபாய் வர்த்தகம்
இடைப்பாடி: இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் சனிசந்தை இன்று காலை கூடியது. பொங்கல் பண்கையினையொட்டி அதிகாலையிலேயே சந்தை களைகட்டியது. நேற்று இரவில் இருந்தே சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், பெங்களூரில் இருந்தும் விவசாயிகள் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லாரி, டெம்போக்களில் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 9 ஆயிரம் ஆடுகளும், 10 ஆயிரம் சேவல், கோழிகளும் விற்பனைக்கு வந்திருந்தன. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கிராமப்புறங்களில் பொதுமக்கள் தங்கள் குல தெய்வங்களுக்கு ஆடு,கோழி பலியிட்டு பொங்கல் வைப்பது வழக்கம். இதற்காக ஆடு, கோழிகளை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகையொட்டி நடைபெறும் சேவல்சண்டைக்காக, சேவல்களை போட்டிபோட்டு மக்கள் வாங்கிச் சென்றனர். சேவல்கள் 1500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் வரையில் விலைபோனது. இன்று ஒரே நாளில் சந்தையில் 10 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/12/2025 1:01:09 PM
-Updated 1/12/2025 12:24:44 PM
-Updated 1/12/2025 12:16:32 PM
-Updated 1/12/2025 12:16:23 PM
-Updated 1/11/2025 5:29:37 PM
-Updated 1/11/2025 5:29:25 PM
-Updated 1/11/2025 3:21:14 PM
-Updated 1/11/2025 3:21:03 PM
-Updated 1/11/2025 3:20:53 PM
-Updated 1/11/2025 3:20:43 PM
-Updated 1/11/2025 3:20:33 PM
-Updated 1/11/2025 3:20:24 PM
-Updated 1/11/2025 3:20:13 PM
-Updated 1/11/2025 3:20:05 PM
-Updated 1/11/2025 3:19:55 PM