சபரிமலை ரயிலில் திடீர் தீ : சென்னையை சேர்ந்த 2 பக்தர்கள் காயம்
திருவனந்தபுரம்: சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னையில் இருந்து கோட்டயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை கோட்டயத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. மாலை 6.15 மணி அளவில் எர்ணாகுளம் அருகே அங்கமாலி ரயில் நிலையத்தை தாண்டி ரயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பி 2 ஏசி பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதைக்கண்ட ஏசி கோச் ரயில்வே ஊழியர் உடனடியாக அங்கிருந்த தீயணைப்பு கருவியால் தீயை உடனடியாக அணைத்தார். மேலும் அபாய சங்கிலி மூலம் ரயிலை நிறுத்தினார். இந்த சம்பவத்தில் ஏசி பெட்டியில் பயணித்த சென்னையை சேர்ந்த 2 ஐயப்ப பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் ரயில்வே ஊழியர் துரிதமாக செயல்பட்டு தீணை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/12/2025 1:01:19 PM
-Updated 1/12/2025 12:24:44 PM
-Updated 1/12/2025 12:16:32 PM
-Updated 1/12/2025 12:16:23 PM
-Updated 1/11/2025 5:29:37 PM
-Updated 1/11/2025 5:29:25 PM
-Updated 1/11/2025 3:21:14 PM
-Updated 1/11/2025 3:21:03 PM
-Updated 1/11/2025 3:20:53 PM
-Updated 1/11/2025 3:20:43 PM
-Updated 1/11/2025 3:20:33 PM
-Updated 1/11/2025 3:20:24 PM
-Updated 1/11/2025 3:20:13 PM
-Updated 1/11/2025 3:20:05 PM
-Updated 1/11/2025 3:19:55 PM