ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் : 12 ஆயிரம் வாலிபர் பங்கேற்றதில் 3,500 பேருக்கே உடல் தகுதி
ஊட்டி: ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் ஊட்டியில் கடந்த 7ம் தேதி துவங்கி, நாளை வரை நடக்கிறது. கோவை, ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, சங்ககிரி உள்பட 11 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். ராணுவ ஆள்சேர்ப்பு மைய மண்டல இயக்குனர் தருண்மதன் கூறியதாவது: சான்றிதழ் சரி பார்க்கும் பணியின் போது 12 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். உடல்தகுதிகளின் கீழ் தேர்வில் 3,500 இளைஞர்கள் மட்டுமே தகுதிபெற்றனர். மருத்துவ சோதனை மற்றும் எழுத்து தேர்வு ஆகியவை முடித்த பின் 400 பேர் மட்டும் தேர்வு செய்யப்படுவர்.
ராணுவ வேலையில் சேர்த்துவிடுவதாக இடைத்தரகர்கள் கூறினால் ஏமாறக்கூடாது. ராணுவத்தில் பணிபுரிய இளைஞர்கள், மாணவர்கள் முன்வர வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ராணுவத்தில் சேர்க்க முன்வர வேண்டும். ஆண்டிற்கு இரு முறை இதுபோன்று ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இம்முறை தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/12/2025 1:01:19 PM
-Updated 1/12/2025 1:01:09 PM
-Updated 1/12/2025 12:24:44 PM
-Updated 1/12/2025 12:16:32 PM
-Updated 1/12/2025 12:16:23 PM
-Updated 1/11/2025 5:29:25 PM
-Updated 1/11/2025 3:21:14 PM
-Updated 1/11/2025 3:21:03 PM
-Updated 1/11/2025 3:20:53 PM
-Updated 1/11/2025 3:20:43 PM
-Updated 1/11/2025 3:20:33 PM
-Updated 1/11/2025 3:20:24 PM
-Updated 1/11/2025 3:20:13 PM
-Updated 1/11/2025 3:20:05 PM
-Updated 1/11/2025 3:19:55 PM