ஆசிரியர், பெற்றோர் கண்டித்ததால் 6ம் வகுப்பு மாணவன் தலைமறைவு
ஆவடி: ஆவடி அருகே கோவில்பதாகை கலைஞர் நகரை சேர்ந்தவர் தாம்சன். கார் டிரைவர். இவரது மனைவி ரோஸ்லின். இவர்களது மகன் ஜெய்சன் (12). இவன் வெள்ளானூரில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறான். சரியாக படிக்கவில்லை என்பதால் அவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். நேற்று பள்ளிக்கு செல்ல மறுத்த அவனை கண்டித்து அனுப்பினர். மேலும் ரேங்க் அட்டையில் தானே கையெழுத்து போட்டு இருப்பதை ஆசிரியர் கண்பிடித்து, திட்டியுள்ளார். பெற்றோரும் ஆசிரியரும் கண்டிப்பு காரணமாக விரக்தியடைந்த மாணவன், பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் தலைமறைவாகிவிட்டான். பெற்றோர் பல இடத்தில் தேடியும் அவனை பற்றி தகவல் இல்லை. இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஜெய்சனை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM