நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தக கண்காட்சி : இன்று மாலை தொடங்குகிறது
சென்னை: சென்னையில் இன்று ‘36வது சென்னை புத்தகக் கண்காட்சி’ தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி ஜனவரி மாதம் நடைபெறும். அதன்படி, ‘36வது சென்னை புத்தகக் காட்சி’ சென்னை, நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி இன்று தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை நடக்கும் துவக்க விழாவில் அமைச்சர் என்.ஆர்.சிவபதி பங்கேற்று, கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ‘பபாசி’ வழங்கும் விருதுகளை வழங்கி பேசுகிறார். மேயர் சைதை துரைசாமி குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார். ‘பபாசி’ தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்று பேசுகிறார். பபாசி செயலாளர் எஸ்.வைரவன் நன்றி தெரிவித்து பேசுகிறார். புத்தகக் கண்காட்சி தினமும் பகல் 2.30மணி முதல் இரவு 8.30மணி நடைபெறும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9மணி வரை நடைபெறும். இந்த புத்தகக் கண்காட்சியில் சுமார் 5 லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM