ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சுவீடன் நாட்டு மாணவிகள் ஆய்வு
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் சுவீடன் நாட்டு பேராசிரியர்கள், மாணவர்கள் ஆய்வு நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கச்சூர் கிராமத்தில் ஹேர் அன்ட் ஹேர் தனியார் தொண்டு நிறுவனம் செயல் படுகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த பேராசிரியர்கள் மெக்ஸ், லூவான்டா ஆகியோர் தலைமையில் 16 மாணவ, மாணவிகள் நேற்று இங்கு வந்தனர். கச்சூரில் தங்கியிருந்து ஊத்துக்கோட்டையில் உள்ள மருத்துவமனை, பள்ளிகளை ஆய்வு செய்தனர். பேரூராட்சி அலுவலகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜராசமாணிக்கம், துணைத் தலைவர் சேக்தாவூத் ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது, இந்திய கலாச்சாரம், இந்தியாவில் வாய்ப்பு அதிகம் உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு படிப்பு வசதி எப்படி உள்ளது. படித்தவர்கள் அரசியலுக்கு வருகிறார்களா என்று கேட்டனர். அதற்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பேரூராட்சி துணைத் தலைவர் பதில் அளித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM