திருக்கழுக்குன்றத்தில் 50 விவசாயிகளுக்கு 68 லட்சத்தில் பவர் டில்லர் மெஷின்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 50 விவசாயிகளுக்கு ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பவர் டில்லர் மெஷின் வழங்கும் விழா திருக்கழுக்குன்றம் வேளாண்மை துறை அலுவலகம் அருகே நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் புஷ்பா ஆறுமுகம் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை உதவி பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் எம்எல்ஏ தண்டரை மனோகரன், ரூ.68 லட்சத்து 55 ஆயிரத்து 225 மதிப்பிலான பவர் டில்லர் மெஷின்களை, விவசாயிகள் 50 பேருக்கு மானியத்துடன் வழங்கி பேசினார். உதவி பொறியாளர்கள் ராஜா தாமஸ், கணேசன், ரகுநாதன், தங்கராஜ், அதிமுக நிர்வாகிகள் நடராஜன், களத்தூர் சுந்தரம், முரளிதாஸ், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM