திருவள்ளூர்: திருவள்ளூரில் புதுப்பெண் உள்பட 2 பேர் மாயமானார்கள். கடத்தலா என்று போலீசார் விசாரிக்கிறார்கள். திருவள்ளூர் பெரிய குப்பம் கற்குழாய் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (24). தொழிலாளி. மனைவி தனலட்சுமி (19). தம்பதிக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் கோயிலுக்குபோன தனலட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி மனைவியை பல இடங்களில் தேடி பார்த்தார். இதுகுறித்து திருவள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார். திருவள்ளூர் அடுத்த கோலப்பன்சேரியை சேர்ந்தவர் செல்வி (19). டிப்ளமோ படித்துள்ளார். நேற்று அதே பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு போன செல்வி திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து தந்தை ராஜ் வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாயமான 2 பெண்களை யாராவது கடத்தி சென்றார்களா என்று விசாரணை நடக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/25/2013 3:11:14 PM
-Updated 1/25/2013 3:11:04 PM
-Updated 1/25/2013 3:10:55 PM
-Updated 1/25/2013 3:10:45 PM
-Updated 1/25/2013 3:10:36 PM
-Updated 1/25/2013 3:10:25 PM
-Updated 1/25/2013 3:10:13 PM
-Updated 1/25/2013 3:10:04 PM
-Updated 1/25/2013 2:33:11 PM
-Updated 1/25/2013 2:33:01 PM
-Updated 1/25/2013 2:32:51 PM
-Updated 1/25/2013 2:32:42 PM
-Updated 1/24/2013 4:56:02 PM
-Updated 1/24/2013 4:55:50 PM
-Updated 1/24/2013 4:55:35 PM