சரமாரி துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணி உள்பட 8 பேர் பலி : போதை ஆசாமி பயங்கரம்
மணிலா, :பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தென் பகுதியில் உள்ளது கவிட் நகரம். இங்கு வசித்தவர் ரொனால்ட் பே. கடந்த ஓராண்டுக்கு முன்பு கிராம தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்டு ரொனால்ட் தோல்வி அடைந்தார். அதன்பின் மனைவியுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து கிராமத்தை விட்டு சென்று விட்டார். என்ன ஆனார் என்று தெரியவில்லை. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மீண்டும் கிராமத்துக்கு வந்தார். நேற்று திடீரென கிராமத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் கர்ப்பிணி உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். துப்பாக்கிச் சூடு நடப்பதை பார்த்து மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடி ஒளிந்து கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் ரொனால்டை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எதற்காக ரொனால்ட் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது தெரியவில்லை.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/8/2025 2:11:59 PM
-Updated 1/8/2025 2:11:49 PM
-Updated 1/8/2025 2:11:38 PM
-Updated 1/8/2025 2:01:12 PM
-Updated 1/8/2025 2:01:01 PM
-Updated 1/8/2025 2:00:49 PM
-Updated 1/8/2025 2:00:36 PM
-Updated 1/8/2025 2:00:21 PM
-Updated 1/8/2025 2:00:10 PM
-Updated 1/8/2025 1:59:59 PM
-Updated 1/8/2025 1:59:48 PM
-Updated 1/8/2025 1:59:37 PM
-Updated 1/8/2025 1:59:25 PM
-Updated 1/8/2025 1:59:15 PM
-Updated 1/7/2025 4:01:27 PM