இமாச்சலில் கடும் குளிர் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடுமையான உறைபனி மற்றும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக உறைபனி கொட்டுகிறது. கடும் குளிரால் மக்கள் அவதிப்படுகின்றனர். சோலன் பகுதியில் மைனஸ் ஒரு டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. மணாலியில் 0.4 டிகிரியாகவும், சந்தேமகர் மற்றும் மன்டியில் 1.2 டிகிரி செல்சியசும், சிம்லாவில் 2, புன்தாரில் 2.4, உனாவில் 3 டிகிரி, பாலம்பூரில் 3.5 டிகிரி செல்சியசாகவும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் வெப்பநிலை இயல்புக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இரண்டு நாட்களுக்கு இந்த நிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில், விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/8/2025 2:11:59 PM
-Updated 1/8/2025 2:11:49 PM
-Updated 1/8/2025 2:11:38 PM
-Updated 1/8/2025 2:01:12 PM
-Updated 1/8/2025 2:01:01 PM
-Updated 1/8/2025 2:00:49 PM
-Updated 1/8/2025 2:00:36 PM
-Updated 1/8/2025 2:00:21 PM
-Updated 1/8/2025 2:00:10 PM
-Updated 1/8/2025 1:59:59 PM
-Updated 1/8/2025 1:59:48 PM
-Updated 1/8/2025 1:59:37 PM
-Updated 1/8/2025 1:59:25 PM
-Updated 1/8/2025 1:59:15 PM
-Updated 1/7/2025 4:01:27 PM