அதிமுக பிரமுகர் கார் கண்ணாடி உடைத்து 50 ஆயிரம் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் குமார். அதிமுக பிரமுகர். இவரது மனைவி சிவகாமி, மாவட்ட கவுன்சிலராக உள்ளார். நேற்று காலை ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையிலுள்ள ஸ்டேட் வங்கிக்கு சென்றார் குமார். அங்கு, ரூ.50 ஆயிரம் எடுத்து கொண்டு செல்லபெருமாள் நகரிலுள்ள கான்ட்ராக்டர் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு காரில் சென்றார். காரை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். ஜெயச்சந்திரனிடம் பேசிவிட்டு வெளியே வந்தார். அப்போது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். காரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/8/2025 2:11:59 PM
-Updated 1/8/2025 2:11:49 PM
-Updated 1/8/2025 2:11:38 PM
-Updated 1/8/2025 2:01:12 PM
-Updated 1/8/2025 2:01:01 PM
-Updated 1/8/2025 2:00:49 PM
-Updated 1/8/2025 2:00:36 PM
-Updated 1/8/2025 2:00:21 PM
-Updated 1/8/2025 2:00:10 PM
-Updated 1/8/2025 1:59:59 PM
-Updated 1/8/2025 1:59:48 PM
-Updated 1/8/2025 1:59:37 PM
-Updated 1/8/2025 1:59:25 PM
-Updated 1/8/2025 1:59:15 PM
-Updated 1/7/2025 4:01:27 PM