சமையல் செய்தபோது விபரீதம் தீயில் கருகிய இளம்பெண் பலி
திருவள்ளூர்: சமையல் செய்தபோது மண்ணெண்ணெய் கேன் தவறி விழுந்ததில் தீயில் கருகிய இளம்பெண் பரிதாபமாக இறந்தார். திருவள்ளூர் அருகே நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த மப்பேடு எறையாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் சூர்யா (18). பிளஸ் 2 படித்துள்ளார். நேற்று முன்தினம் சூர்யா வீட்டில் சமையல் செய்வதற்காக ஸ்டவ்வில் மண்ணெண்ணெய் ஊற்றிய பின் கேனை அருகில் வைத்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த கோழி ஒன்று மண்ணெண்ணெய் கேனை தட்டி விட்டதாம். இதில் மண்ணெணெய் சிதறியதில் சூர்யா உடலில் பட்டு தீபிடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடியவரை மீட்டு சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சூர்யா இறந்தார். புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/8/2025 2:11:59 PM
-Updated 1/8/2025 2:11:49 PM
-Updated 1/8/2025 2:11:38 PM
-Updated 1/8/2025 2:01:12 PM
-Updated 1/8/2025 2:01:01 PM
-Updated 1/8/2025 2:00:49 PM
-Updated 1/8/2025 2:00:36 PM
-Updated 1/8/2025 2:00:21 PM
-Updated 1/8/2025 2:00:10 PM
-Updated 1/8/2025 1:59:59 PM
-Updated 1/8/2025 1:59:48 PM
-Updated 1/8/2025 1:59:37 PM
-Updated 1/8/2025 1:59:25 PM
-Updated 1/8/2025 1:59:15 PM
-Updated 1/7/2025 4:01:27 PM