இரவில் போதையில் அலம்பல் : மளிகை கடைக்குள் ‘உச்சா’ போன எழும்பூர் போலீஸ்காரர்கள் கைது
கீழ்பாக்கம்: மளிகை கடைக்குள் ‘உச்சா’ போன எழும்பூர் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். நெல்லை டவுனை சேர்ந்த செல்வ விநாயகம் (46), சென்னை கீழ்பாக்கம் லேண்டன்ஸ் ரோட்டில் மளிகை கடை வைத்திருக்கிறார். நேற்றிரவு 10 மணிக்கு கடையை பூட்டிக் கொண்டிருந்தார். அப்போது 2 இளைஞர்கள் போதையில் வந்து கடை முன்பு சிறுநீர் கழித்தனர். இதை பார்த்த செல்வ விநாயகம், ‘கடை அருகே இப்படி அசிங்கம் செய்கிறீர்களே’ என தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர்கள், ‘‘நாங்க யார் தெரியுமா, ஆயுதப்படை போலீஸ்காரங்க. எங்களுக்கே அட்வைஸா.. நாங்க நெனச்சா கடைக்குள்ளயே ஒண்ணுக்கு அடிப்போம்’’ என்று கூறியபடி கடைக்குள் சிறுநீர் கழித்துள்ளனர்.
இதை கண்டித்த செல்வ விநாயகத்தை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது முகம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு பக்கத்து கடைக்காரர்கள் ஓடிவந்தனர். அதற்குள் இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். காயமடைந்த செல்வ விநாயகம், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பாக்கம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் சாம்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். வியாபாரியை தாக்கியது மணிகண்டன் (26), அன்புதுரை (25) என்பதும், அவர்கள் எழும்பூரில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ்காரர்களாக இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/7/2025 4:01:27 PM
-Updated 1/7/2025 2:58:13 PM
-Updated 1/7/2025 2:57:58 PM
-Updated 1/7/2025 2:57:42 PM
-Updated 1/7/2025 2:57:31 PM
-Updated 1/7/2025 2:56:18 PM
-Updated 1/7/2025 2:56:03 PM
-Updated 1/7/2025 2:55:52 PM
-Updated 1/7/2025 2:55:35 PM
-Updated 1/7/2025 2:55:24 PM
-Updated 1/7/2025 2:55:14 PM
-Updated 1/7/2025 2:55:04 PM
-Updated 1/7/2025 2:54:55 PM
-Updated 1/7/2025 2:54:44 PM
-Updated 1/5/2025 1:17:53 PM