டேங்க் பேக்டரி காவலாளி கொலை : கொலையாளியிடம் விசாரணை
ஆவடி: ஆவடி அருகே மிட்னமல்லி எம்.ஜி.ராஜா தெருவில் வசித்தவர் விசுவநாதன் (38). ஆவடி டேங்க் பேக்டரி அதிகாரிகள் குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றினார். அதே குடியிருப்பில் காடுவெட்டி 3வது அணைக்கட்டு தெருவை சேர்ந்த மகேந்திரன் (48) என்பவரும் காவலாளியாக பணியாற்றினார். கடந்த 31ம் தேதி, இருவரும் இரவு டூட்டியில் இருந்தனர். அப்போது டூட்டி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகேந்திரன் அடித்ததில் விசுவநாதன் இறந்தார். அவரது உடலை குடியிருப்பு வளாகத்தில் புதைத்துவிட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மகேந்திரன் சரணடைந்தார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், நேற்று மகேந்திரனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசுவநாதன் கொலைக்கு வேறு காரணம் எதுவும் இருக்கிறதா என்று தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/7/2025 4:01:27 PM
-Updated 1/7/2025 2:58:13 PM
-Updated 1/7/2025 2:57:58 PM
-Updated 1/7/2025 2:57:42 PM
-Updated 1/7/2025 2:57:31 PM
-Updated 1/7/2025 2:56:18 PM
-Updated 1/7/2025 2:56:03 PM
-Updated 1/7/2025 2:55:52 PM
-Updated 1/7/2025 2:55:35 PM
-Updated 1/7/2025 2:55:24 PM
-Updated 1/7/2025 2:55:14 PM
-Updated 1/7/2025 2:55:04 PM
-Updated 1/7/2025 2:54:55 PM
-Updated 1/7/2025 2:54:44 PM
-Updated 1/5/2025 1:17:53 PM