தாம்பரம்: மேற்கு தாம்பரம் கல்யாண் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தில்லை. இவரது மனைவி ரேணுகா (55). உறவினர் ஒருவரது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா பீர்க்கன்காரணை பாலாஜி தெருவில் உள்ள மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதற்காக உறவினர்களுடன் பஸ்சில் புறப்பட்டார் ரேணுகா. பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ரயில்வே கேட்டை கடந்து நடந்து சென்றார். பாலாஜி தெருவில் சென்றபோது எதிரே பைக்கில் 3 பேர் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ரேணுகாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு 3 பேரும் மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/7/2025 4:01:27 PM
-Updated 1/7/2025 2:58:13 PM
-Updated 1/7/2025 2:57:58 PM
-Updated 1/7/2025 2:57:42 PM
-Updated 1/7/2025 2:57:31 PM
-Updated 1/7/2025 2:56:18 PM
-Updated 1/7/2025 2:56:03 PM
-Updated 1/7/2025 2:55:52 PM
-Updated 1/7/2025 2:55:35 PM
-Updated 1/7/2025 2:55:24 PM
-Updated 1/7/2025 2:55:14 PM
-Updated 1/7/2025 2:55:04 PM
-Updated 1/7/2025 2:54:55 PM
-Updated 1/7/2025 2:54:44 PM
-Updated 1/5/2025 1:17:53 PM