பணகுடி: நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எஸ்.ஏ.ராஜா (75). ராஜாஸ் என்ற பெயரில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷோபியா ராஜா. 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஒருவாரத்துக்கு முன்பு எஸ்.ஏ.ராஜாவுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உடல் வடக்கன்குளத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. 1984ம் ஆண்டு வடக்கன்குளத்தில் ராஜாஸ் பொறியியல் கல்லூரி ஆரம்பித்தார். தற்போது பல் மருத்துவம், பொறியியல் என 15க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/7/2025 4:01:27 PM
-Updated 1/7/2025 2:58:13 PM
-Updated 1/7/2025 2:57:58 PM
-Updated 1/7/2025 2:57:42 PM
-Updated 1/7/2025 2:57:31 PM
-Updated 1/7/2025 2:56:18 PM
-Updated 1/7/2025 2:56:03 PM
-Updated 1/7/2025 2:55:52 PM
-Updated 1/7/2025 2:55:35 PM
-Updated 1/7/2025 2:55:24 PM
-Updated 1/7/2025 2:55:14 PM
-Updated 1/7/2025 2:55:04 PM
-Updated 1/7/2025 2:54:55 PM
-Updated 1/7/2025 2:54:44 PM
-Updated 1/5/2025 1:17:53 PM