அவுரங்காபாத்: அவுரங்காபாத், லத்தூர் மாவட்டத்தில் உள்ள டிகி கிராமத்தில் கார் டிரக்குடன் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். டிகி கிராமம் அருகில் நன்தத் கர்நாடகா நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் எதிரேவந்த டிரக்குடன் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். டிரக் டிரைவர் மற்றும் காரில் பயணம் செய்த மேலும் 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இறந்தவர்கள் உஸ்மானாபாத் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் பாடீல் (32), அவர் மனைவி பிரனீதா(26), அவர்களது 7 வயது மகள் நேகா என அடையாளம் காணப்பட் டது. கோவிந்த் சாத்புதே என்ற மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/3/2025 5:24:47 PM
-Updated 1/3/2025 5:24:37 PM
-Updated 1/3/2025 2:45:11 PM
-Updated 1/3/2025 2:44:55 PM
-Updated 1/3/2025 2:28:27 PM
-Updated 1/3/2025 2:28:13 PM
-Updated 1/3/2025 2:25:09 PM
-Updated 1/3/2025 2:24:59 PM
-Updated 1/3/2025 2:21:16 PM
-Updated 1/3/2025 2:21:06 PM
-Updated 1/3/2025 2:20:24 PM
-Updated 1/3/2025 2:14:01 PM
-Updated 1/3/2025 2:13:50 PM
-Updated 1/3/2025 2:13:40 PM
-Updated 12/31/2012 2:45:32 PM