திருக்கழுக்குன்றம்: ஈச்சங்கருணை ஊராட்சியில் 230 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் ஆகியவற்றை சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்பி, தண்டரை மனோகரன் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் ஈச்சங்கருணை ஊராட்சியில் தமிழக அரசின் இலவச மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் புஷ்பா ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்பி, தண்டரை மனோகரன் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று 230 பயனாளி களுக்கு இலவச மிக்சி, மின் விசிறி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கினர். விழாவில் செங்கல்பட்டு ஆர்டிஓ செல்லப்பா, தாசில்தார் மனோகரன், வருவாய் ஆய்வாளர் பூங்கொடி, ஒன்றிய அதிமுக செயலாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் எஸ்வந்த்ராவ், வேலாயுதம், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி துணைத் தலைவர் சங்கரி சேகர் நன்றி கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/4/2025 5:08:57 PM
-Updated 1/4/2025 4:38:50 PM
-Updated 1/4/2025 4:38:40 PM
-Updated 1/4/2025 4:38:30 PM
-Updated 1/4/2025 4:38:20 PM
-Updated 1/4/2025 4:38:09 PM
-Updated 1/3/2025 5:24:47 PM
-Updated 1/3/2025 5:24:37 PM
-Updated 1/3/2025 2:45:11 PM
-Updated 1/3/2025 2:44:55 PM
-Updated 1/3/2025 2:28:27 PM
-Updated 1/3/2025 2:28:13 PM
-Updated 1/3/2025 2:25:09 PM
-Updated 1/3/2025 2:24:59 PM
-Updated 1/3/2025 2:21:16 PM