கடம்பத்தூரில் ரயில்வே மேம்பால பணியை விரைவில் துவக்க கோரிக்கை
திருவள்ளூர்: கடம்பத்தூரில் ரயில்வே மேம்பால பணியை விரைவாக தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் சேகர் தலைமை வகித்தார். செயலாளர் மூர்த்தி வரவேற்றார். பொருளாளர் முகமது அலி முன்னிலை வகித்தார். கடம்பத்தூர் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, கடம்பத்தூர் ரயில்வே மேம்பால பணியை விரைவில் தொடங்க வேண்டும். ரயில் நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அந்த கடையை அகற்ற வேண்டும், கடம்பத்தூர் ரயில் நிலைய 3வது நடைமேடையை சீரமைக்க வேண்டும். பயண சீட்டுகளை 2 மையங்கள் மூலம் தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/4/2025 5:08:57 PM
-Updated 1/4/2025 4:38:50 PM
-Updated 1/4/2025 4:38:40 PM
-Updated 1/4/2025 4:38:30 PM
-Updated 1/4/2025 4:38:20 PM
-Updated 1/4/2025 4:38:09 PM
-Updated 1/3/2025 5:24:47 PM
-Updated 1/3/2025 5:24:37 PM
-Updated 1/3/2025 2:45:11 PM
-Updated 1/3/2025 2:44:55 PM
-Updated 1/3/2025 2:28:27 PM
-Updated 1/3/2025 2:28:13 PM
-Updated 1/3/2025 2:25:09 PM
-Updated 1/3/2025 2:24:59 PM
-Updated 1/3/2025 2:21:16 PM