ஆவடி: அம்பத்தூர் தொழிற்பேட்டை 3வது பிரதான சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்தவர் ராமு (31). இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் அன்னம்பாக்கம். திருமண மாகவில்லை. கம்பெனி அருகே வாடகை வீட்டில் நண்பருடன் தங்கி இருந்தார். நேற்று இரவு தனியாக இருந்த ராமு, திடீரென தூக்குப் போட்டு இறந்தார். தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்தார். ராமு உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். குடும்ப பிரச்னை, திருமணமாகாத விரக்தி தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/28/2012 4:47:41 PM
-Updated 11/28/2012 4:47:30 PM
-Updated 11/28/2012 4:47:13 PM
-Updated 11/28/2012 4:47:03 PM
-Updated 11/28/2012 4:46:46 PM
-Updated 11/28/2012 4:46:36 PM
-Updated 11/28/2012 4:46:25 PM
-Updated 11/28/2012 1:01:07 PM
-Updated 11/28/2012 1:00:57 PM
-Updated 11/28/2012 1:00:47 PM
-Updated 11/28/2012 12:51:24 PM
-Updated 11/28/2012 12:51:14 PM
-Updated 11/28/2012 12:51:04 PM
-Updated 11/27/2012 3:13:42 PM
-Updated 11/27/2012 3:13:30 PM