ஆவடி: ஆவடி நகராட்சி முன்னாள் கவுன்சிலரை சரமாரியாக அடித்து உதைத்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடி அருகே ரெட்டிப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுசீலா (55). இவர், ஆவடி நகராட்சி முன்னாள் கவுன்சிலர். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஏழுமலை (70) என்பவருக்கும் வீட்டுக்கு செல்லும் பாதை தொடர்பாக தகராறு இருந்தது. இதனால் அடிக்கடி குடும்பத்தினர் மோதிக் கொள்வார்கள். இது சம்பந்தமாக நேற்றும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், சுசீலாவை ஏழுமலை அடித்துவிட்டார். படுகாயம் அடைந்த சுசீலா, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுசீலா கொடுத்த புகாரின்பேரில், ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/28/2012 4:47:41 PM
-Updated 11/28/2012 4:47:30 PM
-Updated 11/28/2012 4:47:13 PM
-Updated 11/28/2012 4:47:03 PM
-Updated 11/28/2012 4:46:46 PM
-Updated 11/28/2012 4:46:36 PM
-Updated 11/28/2012 4:46:25 PM
-Updated 11/28/2012 1:01:07 PM
-Updated 11/28/2012 1:00:57 PM
-Updated 11/28/2012 1:00:47 PM
-Updated 11/28/2012 12:51:24 PM
-Updated 11/28/2012 12:51:14 PM
-Updated 11/28/2012 12:51:04 PM
-Updated 11/27/2012 3:13:53 PM
-Updated 11/27/2012 3:13:42 PM