கங்கை நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் சாவு
ஹரித்வார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், கங்கை நதியில் மூழ்கி பலியான சம்பவம் உத்தரகண்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகண்டின் ஹரித்வார் மாவட்டம் அஜித்பூர் கிராமத்தில் கங்கையின் கிளை நதி ஓடுகிறது. நேற்று ஷ்யாம் சிங் (35) என்பவர், தனது மகன் ரோகன் (14) மற்றும் உறவினர்கள் அஜய், கவுரவ், சோட்டு, அனில் ஆகியோருடன் நதிக்கரைக்கு வந்தார்.
நதியின் மறுகரையில் மரங்களில் பிளம்ஸ் பழங்கள் இருப்பதை அவர்கள் பார்த்தனர். பழங்களை பறிக்க நதியை கடக்க முயன்றனர். அப்போது நதியின் ஆழமான பகுதியில் அனைவரும் சிக்கினர். தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அனில் மட்டும் நீந்தி கரை சேர்ந்தார். மற்ற அனைவரும் பரிதாபமாக பலியானார்கள். தகவல் அறிந்ததும் போலீசார் சென்று உடல்களை மீட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/19/2012 3:59:44 PM
-Updated 11/19/2012 3:59:19 PM
-Updated 11/19/2012 3:59:07 PM
-Updated 11/19/2012 3:58:47 PM
-Updated 11/19/2012 3:58:16 PM
-Updated 11/19/2012 2:58:36 PM
-Updated 11/19/2012 2:49:04 PM
-Updated 11/19/2012 2:48:51 PM
-Updated 11/19/2012 2:48:37 PM
-Updated 11/19/2012 2:48:25 PM
-Updated 11/19/2012 2:48:11 PM
-Updated 11/19/2012 10:58:20 AM
-Updated 11/19/2012 10:34:04 AM
-Updated 11/19/2012 10:33:53 AM
-Updated 11/19/2012 10:33:40 AM