டெங்கு காய்ச்சல் பாதிப்பு : மாணவன் உள்பட 2 பேர் இன்று பலி
வாடிப்பட்டி: டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உள்பட 2 பேர் இன்று இறந்தனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தனிச்சயம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மகன் கோகுல்ராஜ் (10). இங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவன். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட கோகுல்ராஜுக்கு, வாடிப்பட்டியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து, கடந்த புதன்கிழமை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோகுல்ராஜ், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு பரிதாபமாக இறந்தான்.
மற்றொரு சம்பவம்:
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே உள்ள வயலூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (31). கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டார். காய்ச்சல் தீவிரமாகவே, இவர் 8ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/12/2024 3:10:12 PM
-Updated 11/12/2024 3:09:59 PM
-Updated 11/12/2024 3:08:07 PM
-Updated 11/12/2024 2:53:37 PM
-Updated 11/12/2024 2:42:18 PM
-Updated 11/12/2024 2:41:48 PM
-Updated 11/12/2024 12:21:58 PM
-Updated 11/12/2024 12:17:59 PM
-Updated 11/12/2024 11:52:56 AM
-Updated 11/11/2025 1:54:06 PM
-Updated 11/11/2025 1:46:26 PM
-Updated 11/11/2025 12:57:53 PM
-Updated 11/11/2025 12:54:57 PM
-Updated 11/11/2025 12:50:29 PM
-Updated 11/11/2025 12:26:02 PM