மியான்மரில் பயங்கரம் : பெட்ரோல் ஏற்றிய ரயில் வெடித்து 25 பேர் சாவு
யாங்கூன்: மியான்மரின் மான்டலே நகரில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் ஏற்றிய ரயில் நேற்று காலை செட்கி நகர் அருகே சென்று கொண்டு இருந்தது. ரயிலின் 7 டேங்கர்களில் கேஸ், 2 டேங்கர்களில் பெட்ரோல் இருந்தன. இந்நிலையில் திடீரென ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. பெட்ரோல் டேங்கர்களில் இருந்து பெட்ரோல் வெளியேறி ஆறு போல ஓடியது. இதை பிடிப்பதற்காக கிராம மக்கள் காலி கேன்களுடன் ஓடி வந்தனர். அப்போது டேங்கர்களில் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் 25 பேர் உடல் கருகி பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/12/2024 3:10:12 PM
-Updated 11/12/2024 3:09:59 PM
-Updated 11/12/2024 3:08:07 PM
-Updated 11/12/2024 2:53:37 PM
-Updated 11/12/2024 2:42:18 PM
-Updated 11/12/2024 2:41:48 PM
-Updated 11/12/2024 12:21:58 PM
-Updated 11/12/2024 12:17:59 PM
-Updated 11/12/2024 11:52:56 AM
-Updated 11/11/2025 1:54:06 PM
-Updated 11/11/2025 1:46:26 PM
-Updated 11/11/2025 12:57:53 PM
-Updated 11/11/2025 12:54:57 PM
-Updated 11/11/2025 12:50:29 PM
-Updated 11/11/2025 12:26:02 PM