ஆவடியில் சம்பவம் : மெக்கானிக் கடை தீப்பிடித்து 8 பைக்குகள் எரிந்து சாம்பல்
ஆவடி: ஆவடியில் மெக்கானிக் கடை தீப்பிடித்து 8 பைக்குகள் சாம்பலானது. ஆவடி காமராஜர் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (31). அங்கு மெக்கானிக் ஷாப் நடத்துகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவு திடீரென கடை தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த பக்கத்து கடைக்காரர்கள் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்துவிட்டு, தீயை அணைக்க முயன்றனர். தகவல் அறிந்து ஆவடியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில், சர்வீசுக்கு வந்திருந்த 8 பைக்குகள் எரிந்து சாம்பலானது. இது பற்றி ஆவடி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததா, நாசவேலை காரணமா என்று விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/12/2024 3:10:12 PM
-Updated 11/12/2024 3:09:59 PM
-Updated 11/12/2024 3:08:07 PM
-Updated 11/12/2024 2:53:37 PM
-Updated 11/12/2024 2:42:18 PM
-Updated 11/12/2024 2:41:48 PM
-Updated 11/12/2024 12:21:58 PM
-Updated 11/12/2024 12:17:59 PM
-Updated 11/12/2024 11:52:56 AM
-Updated 11/11/2025 1:54:06 PM
-Updated 11/11/2025 1:46:26 PM
-Updated 11/11/2025 12:57:53 PM
-Updated 11/11/2025 12:54:57 PM
-Updated 11/11/2025 12:50:29 PM
-Updated 11/11/2025 12:26:02 PM